Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்!

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்!

தற்போது நிலவரம் கொண்டுள்ள தாக்தே சூறாவளி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் வடக்கு நோக்கிச் சென்றதால் கேரள மற்றும் கர்நாடக மற்றும் கோவாவின் கரையோரப் பகுதிகளை கடும் காற்று வீசியது மற்றும் பலத்த மழை பெய்தது.

கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசியதால் 5 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி மின் கம்பங்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்தி உள்ளது.இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கருத்துப்படி மிகக் கடுமையாக தீவிரமடைந்துள்ளதால் தாக்தே சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் தீவிரம் அடைந்து இன்று மாலை குஜராத் கடற்கரையை கடக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் லட்சத்தீவு மற்றும் தமிழ்நாட்டின் தெற்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி போர்பந்தர், சோம்நாத் மற்றும் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தின் கடலோர பகுதிகளில் மிகுந்த சேதம் ஏற்படும் என்று கணித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக குஜராத்தில் தாழ்வான கடலோரப் பகுதிகளில் இருந்து 1.5 இலட்சம் மக்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

Exit mobile version