முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது!

0
155
#image_title

முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது. வழக்கறிஞர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுசென்ற போது வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம்.

கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டத்திற்குட்பட்ட தெற்கு கருங்குளம் பயோனியர் தோட்டத்தில் முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் வனதுறையினர் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மூன்று வயதுடைய 8 கிலோ எடை கொண்ட முள்ளம்பன்றியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய வழக்கறிஞர்களான சுப்பிரமணியம், பெருமாள் பிள்ளை, இளமுருகு ஆகியோரையும் அவர்களுடன் வேட்டைக்குச் சென்ற ஜோஸ் மற்றும் ஜான் பெர்லின் ஆகியோரையும் வரத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த சுட்டுக் கொல்லப்பட்ட முள்ளம்பன்றி, நாட்டு துப்பாக்கி ,கத்தி இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வணத்துறையினர் கொண்டு சென்ற நிலையில், அங்கு உடல்நலக் குறைவு காரணமாக மூன்று வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீதமுள்ள ஜோஸ் மற்றும் ஜான் பெர்லின் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போலீசாரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நாகர்கோவில் நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகம் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.