Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து மக்களும் வீட்டின் உள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பணிக்கு செல்வார்கள் அனைவரும்  வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. அதனால் பேருந்தில் செல்பவர்களின் கூட்டம் குறைந்தது. தற்போது நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படும் நிலையில் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்ய தொடங்கிவிட்டனர்.

அதனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைவரும் ஆங்காங்கே சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பேருந்து முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இனிவரும் விழாக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில் கட்டண விவரங்களை www.aoboa.co.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அக்டோபர் 21ஆம் தேதி பயணிக்க திட்டமிடுவோர் இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version