Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FLASH: அசத்தும் தமிழகம்.. 100 நாள் வேலை திட்டம் குறித்து முக்கிய தகவல்!! 

FLAS: Amazing Tamil Nadu.. Important information about 100 day work plan!!

FLAS: Amazing Tamil Nadu.. Important information about 100 day work plan!!

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 86.6 சதவீதம் பேர் பணியாற்றி இந்தியாவிலேயே 3 இடத்தை பெற்றுள்ளது.

கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி பண தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதமாக மத்திய அரசானது 100 நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மூலம் எண்ணற்ற பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். ஆரம்பகட்ட காலத்திலிருந்து தற்பொழுது வரை ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப இதன் சம்பள தொகையானது உயர்த்தப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் ரூ.319 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் எந்தெந்த மாநிலங்கள் சிறப்புற்று அதிக பயனடைந்து வருகிறதென கணக்கெடுப்பை தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதலிடத்தில் கேரளாவும், இரண்டாவது இடத்தில் புதுச்சேரியும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. இதில் வட இந்தியர்களின் பங்கு குறைந்த அளவே உள்ளது.

மேற்கொண்டு ஊரகப் பணிக்கு வராதவர்களின் பெயர் சேர்த்து அதன் பணத்தை கையாடல் செய்வதாக தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறையானது தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இதனால் பணம் கையாடல் செய்வது தவிர்க்கப்படும். கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 86.66% பேர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.

Exit mobile version