FLASH: அமைச்சரவையில் மாற்றம்.. து முதல்வராகும் இருவர்!! ஸ்டாலினின் தடாலடி முடிவு!! 

0
440
FLASH: Change in the cabinet.. The Prime Minister and two!! The end of Stalin's raid!!

FLASH: அமைச்சரவையில் மாற்றம்.. து முதல்வராகும் இருவர்!! ஸ்டாலினின் தடாலடி முடிவு!!

தமிழக அரசியலில் கடந்த சில தினங்களாக பெரும்பாவாரியாக பேசுவது அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவது குறித்துதான். ஏனென்றால் உதயநிதியை துணை முதல்வர் பதவிக்கு அமர்த்தி விட வேண்டும் என்ற முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளதாக பல தகவல்கள் வெளியானது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரகசிய ஆலோசனைக் கூட்டமும் அவரது இல்லத்தில் நடந்தது. இவ்வாறு இருக்கையில் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு ஒத்து வரவில்லை என்று கூறுகின்றனர்.

கட்சியில் பல ஆண்டுகாலமாக உழைத்து அதே பதவியில் இருக்கும் நபர்கள் உதயநிதி துணை முதல்வர் பதவியினால் அதிருப்தியில் உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சரிவர பதவி மற்றும் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்ப கட்ட நாட்களிலேயே இருந்தது. துணை முதல்வர் பதவி கூட இவருக்கு வகுக்கப்படலாம் ஆனால் வாரிசு அரசியலை முன் கொண்டு வர வேண்டுமென்று ஸ்டாலின் தனது மகனை அந்த பதவியில் அமர வைக்க முடிவெடுத்துள்ளார்.

இதனின் வெளிப்பாடாகத்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் துரைமுருகன் அவர்கள், துணை முதல் பதவியை யார் வேண்டாம் என்று சொல்வார் என பதிலளித்தார். இதன் மூலம் அவர் துணை முதல்வர் பதவி தனக்கு கிடைத்தால் வாங்கிக் கொள்ள தயாராக இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அதனால் முதல்வர், துணை முதல்வர் பதவிக்கு இருவரை நியமிக்கலாம் என்றும் அதில் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல அமைச்சர்களின் இலக்காக்கள் மாற்றப்பட உள்ள நிலையில் நாளை அல்லது அதன் மறுநாள் அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்டாலின் அவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே அமைச்சரவை மாற்றம் உண்டாகலாம் என கூறுகின்றனர்.