FLASH: இனி அரசு பள்ளிகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு!! அரசு வெளியிட்ட திடீர் தகவல்!!
புதுச்சேரி அரசு பழைய கல்வித் திட்டத்தை மாற்றி அனைவருக்கும் சிபிஎஸ்சி யை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் பாடத்திட்டங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தற்பொழுது பாடவேளை நேரத்தையும் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இது குறித்த அறிக்கையை புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பழைய பாடத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் கூடுதலாக படிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை சரிகட்டும் விதமாக ஏழு பாட வேலைகள் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இதனை சரிகட்டும் விதமாக இதனை எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு மாணவர்களின் பள்ளி நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கும் பள்ளியானது தற்பொழுது 9 மணிக்கு ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளனர். மாலை 4:20 மணி வரை பள்ளி செயல்படும் என்று கூறியுள்ளனர்.
ஒரு நாளில் எட்டு பாட வேலைகள் அமையும் படி வகுப்புகள் பிரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல மதியம் 12.25 மணியிலிருந்து 1.00 மணி வரை உணவு இடைவேளி என்றும் கூறியுள்ளனர். புதிய பாடத்திட்டம் படிக்க மாணவர்களுக்கு ஏதுவாக அமைய இவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.