Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FLASHL: நாங்கள் வெற்றிப்பெற நீங்கள் கட்டாயம் வேண்டும்.. கதறும் அரசியல் கட்சிகள்!! 

FLASHL: We need you to win.. Screaming political parties!!

FLASHL: We need you to win.. Screaming political parties!!

FLASHL: நாங்கள் வெற்றிப்பெற நீங்கள் கட்டாயம் வேண்டும்.. கதறும் அரசியல் கட்சிகள்!!

2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலானது அனல் பறக்கும் வகையில் இருக்குமென தற்போதே யூகிக்க முடிகிறது. புதியதாக அரசியலில் நுழைந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கூட்டணி கட்சியை கழட்டிவிட்ட அதிமுக என இரு முனைகளையும் சமாளிக்கும் வகையில் திமுகவின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறையும் ஆட்சி தலைமையில் அமர வாய்ப்பிருக்கும்.

ஆனால் திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வருவதென்பது சந்தேகம் என்று கூறுகின்றனர். ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆலோசனை செய்து வருவதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி விஜய்யும் ஆளும் கட்சியை தற்போதிலிருந்து எதிர்த்து வருகிறார். இதனால் கட்டாயம் திமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. இவர்களை சமாளிக்க வேண்டுமென்றால் தேர்தல் வியூகம் அமைத்து அரசியல் களப்பணிகளை செய்ய வேண்டும்.

இதற்காக தேர்தல் வியூகம் அறிந்த மிகவும் பிரபலமான பிரசாந்த் கிஷோரை திமுக நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தற்பொழுது நடந்து முடிந்த ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் உதவி புரிந்து சந்திரபாபு நாயுடு வெற்றி பெற  முக்கிய காரணமாக அமைந்தார் என பல தகவல்கள் வெளியானது. அதேபோல திமுகவிற்கு உதவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் தேர்தல் வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர், விஜய் தன்னிடம் வந்து உதவி கேட்டால் நான் செய்ய தயாராக உள்ளேன் என கூறியுள்ளார். இப்படி திமுக அதிமுக என இருவரும் தங்களது ஆட்சி அமைய இவரிடம் உதவி கேட்க உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் தவெக தற்பொழுது வரை இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் அவர்கள், யார் என்னிடம் வந்தாலும் அவர்களுக்குரிய உதவியை செய்வேன். ஆனால் முழுமையாக அவர்கள் கட்சியில் ஈடு படமாட்டேன். அது விஜயாக இருந்தாலும் சரி என கூறியுள்ளார். இதற்கு மாறாக பீகாரில் தனது அரசியல் பணியில் முழுமூச்சாக இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக அதிமுக என இருவரும் பி கே வை கழுகைப்போல் வட்டமிடுகையில் தவெக பின்பு வந்து இதில் ஐக்கியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version