சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

0
159
#image_title

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

நமது சேலம் மாவட்டத்தில் மறுபடி விமான போக்குவரத்துக்கு தொடங்கவிருக்கின்றது.இது சேலம் மக்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

பல இந்திய விமானசேவை நிறுவனங்களும் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை நடுத்தர மக்களும் பயன்பெரும் வகையில் ஓரளவிற்கு மலிவு விலையில் வழங்கிவருகிறது.இதன் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சென்னை,கோவை போன்ற முக்கிய தொழில் நகரங்களை தவிர்த்து சேலம் மாவட்டம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் வான்வெளி போக்குவரத்து தொழில் நகர அந்தஸ்தை பெற்றுத்தருவதற்கு விமான நிலையம் இன்றியமையாத ஒன்றாகவுள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட நகரங்களின் வான்வெளி போக்குவரத்தை உறுதிபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் “உதான்”.

இந்நிலையில் கடந்த 2018 மார்ச் மாதம் வரை விமானங்கள் சேலத்திலிருந்து சென்னை வான்வெளி வழித்தடத்தில் விமானங்கள் இயங்கிவந்தன.கொரோனா ஊரடங்கு காலத்தில் இச்சேவைகள் நிறுத்தப்பட்டது.தற்போதுவரை சேலத்தில் விமான சேவைகள் இயங்காமல் தான் உள்ளது.

இந்நிலையில் சேலம் விமான சேவைகளை மறுபடி தொடங்க மக்கள் வலியுறுத்தி வந்தனர்.மக்கள் கோரிக்கைக்கு இணங்க உதான் 5.0 திட்டத்தின் மூலம் சேலத்திற்கு விமான சேவைகள் அக்டோபர் 16 தேதி மீண்டும் துவங்கவுள்ளது.

இதன்படி சேலம் விமான வழித்தடமானது பெங்களூரு- சேலம்- கொச்சி மற்றும் கொச்சி- சேலம்- பெங்களூரு ஆகிய ரூட்களில் தற்போது பயண சீட்டுகள் முன்பதிவாகி வருகின்றன.

இதனைத்தவிர பெங்களூரு- சேலம்- ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்- சேலம்- பெங்களூரு ஆகிய வழித்தடங்களிலும் விமானங்கள் இயங்கும்.

இச்சேவைகளை ஹைதராபாத்- சேலம்- பெங்களூரு ரூட்டில் இண்டிகோ விமானங்களை இயக்கவுள்ளது.இதனைதொடர்ந்து பெங்களூரு-சேலம்-கொச்சி ரூட்டில் அலையன்ஸ் ஏர் விமானங்களை இயக்கும். இந்த விமானங்கள் 72 இருக்கைகள் கொண்டவையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.முதற்கட்ட சேவையாக சேலம்-பெங்களூரு வழித்தடத்தில் இயங்கும்.