Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி!

Flood water surrounding the Salem residential area! Public suffering!

Flood water surrounding the Salem residential area! Public suffering!

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி!

கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தினாலும், ஆறு மற்றும் ஏரிகளில் நீர் திறந்து விட்ட காரணத்தினாலும் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டி நெடுஞ்சாலையில், சிவதாபுரம் என்ற பகுதி உள்ளது. அங்கு கனத்த மழை பெய்த காரணத்தினால் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக அப்பகுதியில் மக்கள் வண்டிகளை ஓட்ட முடியாமல் தள்ளி செல்கின்றனர். அதுமட்டுமின்றி அந்த வெள்ள நீரானது அங்குள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ளது. இதனால் அங்கு உள்ள மக்கள் பெருமளவு அவதிக்குள்ளாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வெள்ள நீரில் பல விஷ ஜந்துக்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அவ்வூர் மக்கள் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version