தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

0
141
Flooding in Dharmapuri district? Danger warning for coastal people!

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மிக தீவிரமடைந்து வருகிறது. இதைதொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் தீராத மழை கொட்டி வருகிறது.இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமிக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு அணைகளும் முழுமையாக நிரம்பியது. இந்நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபநீர் காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது கர்நாடகாக்குட்பட்ட தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் இந்த தண்ணீரானது தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்து அடைகின்றது. இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரானது வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள மரங்கள் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது .மேலும் காவிரி கரையோர பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் மற்றும் போட் சவாரி செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கின்றது. மேலும் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.