Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா காலத்திலும் நெகிழ செய்த பூ வியாபாரிகள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள தாம்சன்  ஸ்டிராபெர்ரி பண்ணையில் வழக்கமாக, பழவகைகளும் பரங்கிக்காய்களும் வளர்க்கப்படும். வித்தியாசமாக, பண்ணையில் உள்ள 22 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க சூரியகாந்திச் செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன! பூக்களைப் பார்க்க, சுற்றுவட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் திரண்டு வருகின்றன.

பார்வையாளர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பூக்களிடையே இடைவெளி இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது! பூக்கள் 15-க்கும் மேற்பட்ட திடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பருவம் கடந்துகொண்டிருந்தது. ஆனால் கிருமித்தொற்று மறைவதாகத் தெரியவில்லை. பூக்களைப் பார்த்தாவது மக்களின் முகங்களில் சிரிப்பு வரட்டுமே என்று எண்ணினோம் என்று பண்ணையின் உரிமையாளர்கள் கூறினர்.

Exit mobile version