மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு!
தற்பொழுது மோடி எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏனென்றால் அவர் கூறிய மூன்று வேளாண் சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் திருப்தியானதாக காணப்படவில்லை. தங்களது உழைப்பை போட்டு விளைவிக்கும் பொருள் அனைத்திற்கும் கார்ப்பரேட் கம்பெனி விலை நிர்ணயிக்குமா என ஆரம்பித்து பாஜகவிற்கு எதிராக பல மாநிலங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டங்களின் பட்டியலில் ஒன்று தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. சமீபகாலமாக பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் ஏறுவது இறங்குவது என்ற மாற்றமாகவே உள்ளது.
அந்த வகையில் இரு வாரம் முன்பு தொண்ணூற்று ஐந்து என்ற விலை பட்டியலில் இருந்தது. இன்று நூறு ரூபாயை எட்டியுள்ளது. தொடர்ந்து மக்களும் விலையை குறைக்கும் படி போராட்டம் செய்து வருகின்றனர்.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தையே மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்தும் மக்களுக்கு இது பெரும் சிரமமாக உள்ளது.பெட்ரோல் டீசல் விலை உயர்வு மட்டுமின்றி நீட் தேர்வை ரத்து செய்யும்படி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.அனால் மத்திய அரசோ எதனையும் கண்டுகொள்ளவில்லை.
அந்த வகையில் இன்று கோவையில் மக்களின் மன வேதனையை அரசுக்கு எடுத்துக் கூறும் விதமாக போராட்டம் நடத்தினர். கோவையில் ஜி கே எம் எம் என்ற மருத்துவமனைக்கு அருகில் ஓர் பெட்ரோல் நிலையம் உள்ளது. பெட்ரோல் நிலையத்தில் மோடியின் புகைப்படம் அமைக்கப்பட்ட ஒரு கட்டவுட் இருந்தது. அதனை தபெதிகவினர் அகற்றிவிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதில் 30 க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.