Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!

பொதுவாக இறைவனை நாம் அர்ச்சிக்க கூடிய பல்வேறு பொருட்களும் ஒன்றுதான் இந்த மலர்கள். நமது முன்னோர்கள், முனிவர்கள், ஞானிகள் என அனைவரும் இறைவனை அர்ச்சிக்க பயன்படுத்தியதும் இந்த மலர்கள்தான். இந்த உலகில் கோடிக்கணக்கான மலர் வகைகள் உள்ளன. ஆனால் நமக்குத் தெரிந்ததும், இறைவனுக்கு சூட்டக்கூடிய மலர்களும் என ஒரு சில குறிப்பிட்ட மலர்கள் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

என்னென்ன மலர்களை இறைவனுக்கு வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து காண்போம்.

1. அல்லிப்பூ- செல்வம் பெருகும்

2. பூவரசம் பூ- உடல்நலம் பெருகும்

3. வாடாமல்லி- மரண பயத்தை போக்கும்

4. மல்லிகை- குடும்ப அமைதியை ஏற்படுத்தும்

5. செம்பருத்தி- நோயற்ற வாழ்வை பெற்று தரும்

6. காயாம்பூ -நன்மைகள் பல கிடைக்கும்

7. அரளிப்பூ- கடனை தீர்க்கும்

8. ஆவாரம் பூ- நினைவாற்றலை அதிகரிக்கும்

9. ரோஜா பூ -குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும்

10. பன்னீர் ரோஜா- நினைத்ததை நிறைவேற்றும் தன்மையை தரும்

11. மரிக்கொழுந்து- குலதெய்வத்தின் அருளை பெற்று தரும்

12. நந்தியாவட்டம்- குழந்தை இன்மையை போக்கும்

13. சங்குப்பூ (நீல நிறம்)- மகாவிஷ்ணு அருளை பெற்றுத்தரும்

14. சங்குப்பூ (வெள்ளை நிறம்)-மன ஒருமைப்பாடு கிடைக்கும்

15. நித்திய கல்யாணி- மகாலட்சுமியின் அருமை பற்றி தரும்

16. தாமரைப்பூ- தெய்வீக சக்தியையும், ஞானத்தையும் தரும்

17. சாமந்திப்பூ-மனசக்தியை அதிகரிக்கும்.

18. கொய்யாப்பூ- நிதானத்தை தரும்

19. பூசணிப்பூ- சக்திகளை அதிகமாகும்

20. வேப்பம்பூ- பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரும்.

கனகாம்பரம் பூ, டிசம்பர் பூ ஆகியவை மனம் அற்றவையாக இருப்பதால் அவற்றை இறைவனுக்கு அர்ச்சிக்க பயன்படுத்துவது இல்லை. இந்த மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வதாலும், இறைவனுக்கு சூட்டுவதாலும் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

காய்ந்துபோன, அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த மற்றும் மொட்டாக இருக்கக்கூடிய மலர்களை தவிர்த்து விட்டு, நன்கு வெடித்த மற்றும் வாசனை உள்ள பூக்களை இறைவனுக்கு சூட்ட வேண்டும். சில தெய்வங்களுக்கு சில மலர்களைப் பயன்படுத்தக் கூடாது. அது என்னென்ன மலர்கள் என்பதை காண்போம்.

விநாயகருக்கு துளசியை கொண்டு அர்ச்சிக்க கூடாது. சதுர்த்தி அன்று மட்டும் துளசியை கொண்டு அர்ச்சிக்கலாம். விஷ்ணுவிற்கு ஊமத்தம் பூ மற்றும் எருக்கம் பூ உகந்தது அல்ல. அம்பிகைக்கும், துர்க்கைக்கும் அருகம்புல் பயன்படுத்தக் கூடாது.

மகாலட்சுமிக்கு தும்பைப் பூ அர்ச்சனை செய்யக்கூடாது. சூரிய பகவானுக்கு வில்வம் பயன்படுத்தக்கூடாது. சரஸ்வதி தேவிக்கு பவள மல்லிகை கொண்டு அர்ச்சிக்க கூடாது. பைரவருக்கு நந்தியாவட்டம் மற்றும் மல்லிகை போன்ற வெண்மை நிற மலர்களை தவிர்ப்பது நல்லது.

Exit mobile version