Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதுச்சேரியில் மேம்பாலம் திறப்பு! அமைச்சர் திறந்து வைத்தார்!

புதுச்சேரியில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அரும்பார்த்தபுரத்தின் ரயில்வே கிராசிங் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த மேம்பாலம் கட்ட பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேம்பாலம் ரூபாய் 35 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டதாகும்.

இந்த மேம்பாலம் சுல்தான்பேட்டில் இருந்து துவங்கி அரும்பார்த்தபுரம் வரை ஒரு கிலோமீட்டருக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்காரி அவர்கள் திறந்து வைத்துள்ளார்

அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் இந்த மேம்பாலத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பாலம் போக்குவரத்து இடையூறுகளை தவிர்ப்பதற்கும், விபத்துகளை தவிர்ப்பதற்கும், மக்கள் குறைந்த நேரத்தில் இந்த சாலைகளை கடக்க உதவிகரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் அமைச்சர் நிதின்கட்காரி இடம் புதுச்சேரியில் பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கோரியும் மற்றும் மேம்பாலம் கட்டுவதற்கு 232 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரியும் கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

Exit mobile version