மக்களே உங்களின்  சிரமத்தை போக்க இதோ புதிய பேருந்து சேவை!!

0
161
Folks here is a new bus service to ease your troubles!!

மக்களே உங்களின்  சிரமத்தை போக்க இதோ புதிய பேருந்து சேவை!!

மாநில அரசு  மக்களுக்கு  பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம்.

சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 15 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. மீண்டும் இந்த பேருந்து சேவை தொடங்கயுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் முக்கிய ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த பேருந்து மாடி பேருந்து என்றும்  அழைக்கப்படும். இந்த பேருந்து சேவைகள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட  நகரங்களில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயக்கப்பட்டது. தற்போது வரை அந்த பேருந்தின் பயன்பாடு இல்லை.

1997 ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த பேருந்து மின் கம்பி மரங்கள் இல்லாத இருக்கும் சாலையில் மட்டும் இயக்கப்பட்டது. இதன் மூலம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லாம். இது பெரும் உதவியாக இருந்தது. அதன் பின் 2008 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் டபுள் டக்கர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

மேலும் மீண்டும் தொடங்குவது பற்றி அதிகாரிகள் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறி இருந்தார். அதனையடுத்து இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிவித்திருந்தார். தற்போது இன்று சென்னை அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை மின்சார டபுள் பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த பேருந்து இயக்கப்பட்டால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.