நமது சுவாச உறுப்பான நுரையீரலில் சளி தேங்கினால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.சுவாச மண்டலத்தில் அதிகளவு சளி தேங்கினால் மூச்சடைப்பு,தூக்கமின்மை,மூச்சு விடுவதிலில் சிரமம்,மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.
நுரையீரல் சளிக்கான அறிகுறிகள்:
*இருமல்
*மூச்சுத்திணறல்
*காய்ச்சல்
*உடல் வலி
நுரையீரல் சளிக்கான காரணங்கள்:
*ஆஸ்துமா
*ஒவ்வாமை
*புகைபிடித்தல்
*பருவநிலை மாற்றம்
*காற்று மாசுபாடு
நுரையீலில் படிந்துள்ள சளியை அகற்ற நாம் பின்பற்ற வேண்டிய இயற்கை வழிகள்:
1)கல் உப்பு நீர்
வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டை,நுரையீரலில் தேங்கியுள்ள சளி கரைந்து வெளியேறும்.
2)புதினா தேநீர்
ஒரு கிளாஸ் நீரில் நான்கு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடித்து தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் படிந்துள்ள சளி அகலும்.
3)இஞ்சி பானம்:
ஒரு கப் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சியை இடித்து போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி கரையும்.
4)நீராவி
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆவி வரும் வரை கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கல் உப்பு சேர்த்து ஆவிபிடித்தால் சுவாசப் பாதையில் படிந்துள்ள சளி கரையும்.
5)மஞ்சள் பானம்
ஒரு கிளாஸ் சூடான நீரில் மஞ்சள் கலந்து குடித்தால் நுரையீரல் சளி வெளியேறிவிடும்.மஞ்சளில் உள்ள குர்மின் என்ற வேதிப்பொருள் சளியை கரைப்பதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
6)பூண்டு தண்ணீர்
சளியை கரைக்கும் ஆன்டிபயாடிக் ஆக பூண்டு செயல்படுகிறது.ஒரு பல் பூண்டை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடித்தால் சளி பாதிப்பு அகலும்.
7)சூடான தண்ணீர்
வெது வெதுப்பான தண்ணீர் பருகுவதன் மூலம் சளியை கரைத்து வெளியேற்றலாம்.
8)யூக்கலிப்டஸ் நீராவி
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சில துளிகள் யூக்கலிப்டஸ் எண்ணெய் சேர்த்து ஆவிபிடித்தால் நுரையீரலில் தேங்கிய சளி கரையும்.