இந்த 2 டிப்ஸை பாலோ பண்ணுங்க!! உங்க முகத்தில் மங்கு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!
உங்கள் முகத்தில் இருக்கும் மங்கு பிரச்சனையை குணப்படுத்த இரண்டு சுலபமான எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
சிலருக்கு அழகான முகத்தில் கருப்பு நிறப் புள்ளிகள் இருக்கும். இந்த கருப்பு நிற புள்ளிகள் நமது முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றது.இந்த கரும்புள்ளிகள் எனப்படும் மங்கு சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் ஏற்படும்.அலர்ஜி காரணமாகவும் மங்கு பிரச்சனை ஏற்படும்.
முகத்தில் கருப்பு நிறத்தில் ஏற்படும் இந்த மங்கு பிரச்சனையை மெலஸ்மா என்றும் அழைப்பர்.மங்கு ஏற்படுவதை முன்கூட்டியே நீங்கள் அறிந்து கொண்டால் அதை நீங்கள் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி குணப்படுத்தி விடலாம்.
பொதுவாக மங்கு பிரச்சனை கண்ணத்திலும், மூக்கிலும் நிச்சியமாக வரும். மேலும் முழங்கால் பகுதியிலும் மங்கு பிரச்சனை ஏற்படும்.பெண்களுக்கு இந்த மங்கு பிரச்சனை அதிகமாக ஏற்படும்.பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், ஒழுங்கற்ற மாதவிடாய், மொனோபாஸ் போன்ற பிரச்சனைகளால் இந்த மங்கு ஏற்படும்.இதை குணப்படுத்த இரண்டு எளிமையான வழிமுறைகள் உள்ளது.அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மங்கு பிரச்சனையை குணப்படுத்தும் வழிமுறைகள்…
மங்கு பிரச்சனையை பாலை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம். முதலில் உங்கள் முகத்தை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக மங்கு இருக்கும் இடத்தை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் காய்ச்சாத பாலை சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பஞ்சை பயன்படுத்தி பாலை தொட்டு முகத்தில் தேய்க்க வேண்டும்.5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள மங்கு பிரச்சனை சரியாகும். மேலும் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கும்.
அதன் பிறகு கொழுந்தாக இருக்கும் வேப்பிலையை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அந்த விழுதை முகத்தில் மங்கு எந்த இடத்தில் இருக்கின்றதோ அங்கு இதை தேய்க்க வேண்டும். காய்ந்த பின்னர் கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள மங்கு மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.