இந்த 6 மட்டும் ஃபாலோ பண்ணுங்க பல் சொத்தை பல் வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

0
113
Follow these 6 only and there will be no room for talking about toothache and toothache!!

இந்த 6 மட்டும் ஃபாலோ பண்ணுங்க பல் சொத்தை பல் வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

ஒருவருக்கு பல்வலி மட்டும் வந்துவிட்டால் அவர்களால் அடுத்த கட்ட வேலை உணவைக் கூட சரியாக உண்ண முடியாது. கெட்ட பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் சிக்கி சொத்தையாக மாறிவிடுகிறது. காலப்போக்கில் அந்த சொத்தை பல்லில் ஏதேனும் சாப்பிடும் சிறு துளி பட்டாலே உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்பட்டு விடும். பின்பு வீக்கம் வலி என மாறி மாறி பல வேதனைகளை அனுபவிக்க வேண்டியதாகிவிடும். இதிலிருந்து நீல இந்த ஆறு டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும்.

ஆயில் புல்லிங்:
காலையில் எழுந்தவுடன் முதலில் வாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கொப்பளித்து வர வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறிவிடும். பாக்டீரியாக்கள் நமது பல் இடுக்குகளில் சிக்க வில்லை என்றால் சொத்தை பல் ஏற்படுவதும் உண்டாகாது.

கிராம்பு எண்ணெய்:
சிறிதளவு கிராம்பு எண்ணெயை எடுத்து கால் டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதனை ஒரு காட்டன் துணி கொண்டு தொட்டு சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் ஒத்தி எடுக்க வேண்டும்.
இவ்வாறு தூங்குவதற்கு முன் தினம் தோறும் செய்து வர சொத்தைப்பல் வலி குணமாகும்.
உப்பு தண்ணீர்:
பல் சொத்தை வராமல் ஆரம்ப கட்ட காலத்திலேயே தடுக்க முதலில் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து பல் துலக்குவதற்கு முன் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

பூண்டு:
பூண்டு சொத்தை பால்லில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும். மூன்று அல்லது நான்கு பல் பூண்டு எடுத்து அதனை தட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து முதலில் பத்து நிமிடம் சொத்தை பல் மீது அப்படியே வைத்து விட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து அதனை அழுத்த வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வர கெட்ட பாக்டீரியாக்கள் நீங்கி பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

கிருமிநாசினியாக மஞ்சள்:
மஞ்சள் ஒரு ஆன்ட்டி பாக்டீரியாவாக பயன்படுவதால் தினந்தோறும் சிறிதளவு பற்களில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரில் பற்களை கழுவி வர வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

வேப்பிலை சாறு:
சிறிதளவு வேப்பிலையை பறித்து அதில் உள்ள சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சொத்தை பல் மீது தடவி அப்படியே 10 நிமிடம் விட்டு விட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளித்து வந்தால் சொத்தைப்பல் எப்பொழுதும் வராது.