Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைசா செலவு இன்றி தலையில் உள்ள பொடுகை நீக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்!!

Follow these home remedies to get rid of dandruff without spending a penny!!

Follow these home remedies to get rid of dandruff without spending a penny!!

பைசா செலவு இன்றி தலையில் உள்ள பொடுகை நீக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்!!

பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று பொடுகு.ஒரு முறை இந்த பாதிப்பு ஏற்பட்டாலே முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்றவை ஏற்படும்.இந்த பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

1)வேப்பிலை

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி தலையை அலசி வந்தால் பொடுகு அடியோடு நீங்கும்.

2)செம்பருத்தி பூ

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூ ஒரு கைப்பிடி அளவு போட்டு காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு அழியும்.

3)வேப்பம் பூ

ஆலிவ் ஆயிலில் சிறிது வேப்பம் பூ சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட்டு தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை முழுமையாக நீங்கும்.

4)கற்றாழை

கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

5)வெந்தயம்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை முழுமையாக நீங்கும்.

6)சின்ன வெங்காயம்

நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை தலைக்கு அப்ளை செய்து குளித்தால் பொடுகு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

7)ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கிளாஸ் நீரில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை முழுமையாக நீங்கும்.

Exit mobile version