ஒரே நாளில் வாய்ப்புண் குணமாக இதை பாலோ பண்ணுங்க!!
நம்மில் சிலருக்கு வாய்ப்புண் இருக்கும். இதனால் நாம் சரியாக உணவு உண்ண முடியாது. டீ, காபி, குளிர்பானம் எதையும் அருந்த முடியாமல் வலியால் வேதனைப்படுவோம்.
அந்த வேதனையை ஏற்படுத்தும் வாய்ப்புண்களை சரி செய்ய அற்புதமான வழிமுறையை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
வாய்ப்புண் என்பது பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், சிகரெட், பான் மசாலா போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் வரக்கூடும். அல்சர் பிரச்சனை அதாவது வயிற்றில் புண் இருப்பவர்களுக்கும் இந்த வாய்ப்புண் வரக்கூடும்.
வாய்ப்புண் வந்துவிட்டால் ஒழுங்காக சாப்பிட இயலாது. தண்ணீர், டீ போன்றவற்றையும் குடிக்க முடியாது. எச்சிலைக் கூட முழுங்க முடியாது. ஏன் நம்மால் பேசுவது கூட சிறிது கடினமான செயலாக இருக்கும்.
இந்த வாய்ப் புண் பொதுவாக வந்தவுடன் 5 நாட்களில் சரியாகி விடும். அவ்வாறு 5 நாட்களில் சரியாகவில்லை என்றால் நீங்கள் இதற்கு சரியான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
வாய்ப்புண்ணை எவ்வாறு சரி செய்வது:
* முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கெள்ளவும். பிறகு இதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
* தண்ணீர் கொதித்து வரும் பொழுது இதில் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய மஞ்சள் பொடியை கால் டீஸ்பூன் அளவு எடுத்து இதில் சேர்க்க வேண்டும்.
* மஞ்சள் பொடியை சேர்த்த பிறகு ஒரு நிமிடம் வரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
இந்த தண்ணீர் ஆறிய பிறகு இதை வடிகட்டி குடிக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும். இரண்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது இரண்டு வழிமுறைகளையும் பின்பற்றலாம்.
வாய்ப்புண் வரக்கூடாது என்பதற்கு சிறய டிப்ஸ்
மேற்கூறிய தண்ணீரை தயார் செய்யாமலே வாய்ப்புண்ணை சரி செய்யலாம். அதுவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மூலமாக வாய்ப்புண் வராமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் வராமல் தடுக்க நிறைய பழங்கள், காய் கறிகள், கீரை வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது கூடவே முருங்கைக் காய், தக்காளி, சுண்டைக்காய், பால், தயிர், வெண்ணெய், முட்டை போன்றவற்றை உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புண் பிரச்சனையை தடுக்க தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை இறக்கி லேசான சூடாக இருக்கும் பொழுது இந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் பிரச்சனையே இருக்காது. இந்த வழியை பின்பற்றினால் வாய்ப்புண் பிரச்சனை மட்டுமில்லாமல் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்றவையும் குணமாகும்.