உதட்டின் கருமை நீங்கி பொலிவு பெற இந்த மருத்துவ முறையை பாலோ பண்ணுங்க!!

0
112
#image_title

உதட்டின் கருமை நீங்கி பொலிவு பெற இந்த மருத்துவ முறையை பாலோ பண்ணுங்க!!

நம்மில் பலரின் உதடுகள் கருமையாக,பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி உதட்டின் மேல் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றி பொலிவானதாக மாற்ற முடியும்.

தேவையான பொருட்கள்:-

*தேன் – 1 ஸ்பூன்

*பாதாம் பருப்பு – 3

*ஓட்ஸ் – 1 ஸ்பூன்

*எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:-

1.முதலில் பாதம் பருப்பை 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்னர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

2.பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பாதாம் பருப்பு,ஓட்ஸ்,எலுமிச்சை சாறு மற்றும் தூய தேன் கலந்து மைய்ய அரைக்க வேண்டும்.

3.பின்னர் அதனை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ள வேண்டும்.உதடை நன்கு சுத்தம் செய்த பிறகு அரைத்து வைத்துள்ள பாதாம்,ஓட்ஸ் விழுதை உதட்டின் மேல் அப்ளை செய்ய வேண்டும்.

4.குறைந்தது 15 நிமிடங்கள் வரை உதட்டின் மேல் அந்த கலவை இருக்கும்படி செய்து பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உதட்டின் மேல் காணப்படும் இறந்த செல்கள் அழிந்து விடும்.இதனால் உதடு பொலிவாகவும்,அழகாகவும் காணப்படும்.