சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை!! அட இவருக்கா?? இந்த நிலைமை அதிர்ச்சியில்  ரசிகர்கள்!!

0
118
Following Samantha, the actress suffers from a rare disease!! Is this him?? This situation shocked the fans!!

சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை!! அட இவருக்கா?? இந்த நிலைமை அதிர்ச்சியில்  ரசிகர்கள்!!

பிரபல நடிகை ஒருவர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழில் அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, புலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா தான் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான நந்திதா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் திரையுலகில் நுழைந்த அவர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு திருப்பூர் முனையாகவும் அமைந்தது.

அந்த படத்தை தொடர்ந்து தமிழில் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் நந்திதா.அதன் பின்னர் நடிகர் விஜய் உடன் புலி படத்தில் நடித்தார். தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகம் சென்றார்.

தெலுங்கில் அவருக்கு அடுத்தடுத்து பல வித்தியாசமான வேடங்கள் கிடைத்து வருவதால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவரது நடிப்பில் ஹிடின்பா என்ற தெலுங்கு படம் தயாராகியுள்ளது. இது வருகிற ஜூலை 20-ஆம்  தேதி திரைக்கு வர இருப்பதால் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் படுவேகமாக  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி அளித்த நந்திதா  தனக்கு இருக்கும் அரியவகை நோய் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். தான் பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறு நோயால் மிகவும் அவதிப்படுவதாக கூறியுள்ளார். இந்த நோயின் காரணமாக உடல் எடையில் ஏற்ற,. இறக்கம் ஏற்படும் மேலும் ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்படும் என இந்த நோயின் தீவிரம் குறித்து கூறியுள்ள அவர் இதன் காரணமாகத்தான் கடினமான உடற்பயிற்சிகளை தன்னால் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நோயானது தற்போது மெதுவாக உடலில் பரவி வருவதாகவும், கடந்த மூன்று வருடங்களாக இந்த நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறிய  அவர்,தூக்கம் இல்லாத இரவுகள் மற்றும் உடல் அழுத்தத்தால் இந்த நோயானது ஏற்படுகிறது என தெரிவித்தார்.

இது எப்போதும் உடலில் தங்கி இருப்பதால் அது ஒருபோதும் போகாது. சில சமயங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும் என கூறி உள்ள அவர் அதன் காரணமாக விரைவில் தான் சோர்வடைவதாகவும் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகளும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா  சினிமா படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்ததாக அவர்  தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா மையோசிட்டிஸ் பாதிப்பால் அவதிப்படுவதைப் போல நடிகை நந்திதாவும் பைப்ரோமியாலஜியா என்ற நோயால்  அவதிப்பட்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.