Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 பிரபல நடிகையை தொடர்ந்து அவரது குடும்பமே கொரோனாவுக்கு கூண்டோடு சிக்கிய சோகம்!!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் தனது நடிப்பின் மூலம் பிரபலமான நடிகை தமன்னா அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தற்போது  அவரைத் தொடர்ந்து அவருடைய அப்பா மற்றும் அம்மாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.

மேலும் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.இந்த கொரோனா பாதிப்பானது பாமர  மக்கள் முதல் அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என வரிசையாக பதம் பார்த்து வருகிறது.

இந்த  கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி என்னவென்றால்  முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக நம்மளை நாமே தற்காத்துக் கொள்வதே ஆகும்.

Exit mobile version