தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

0
157

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

ஈரோடு பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் இருக்கின்றது இது கால காலமாக செயல்பட்டு வருகின்றது. இங்கு 20க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. சத்தியமங்கலம் ,சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்த நிலையில் வருகிறது.பல வகையான பூக்கள் இங்கு வரவிருக்கும்.அப்படி ஒன்றுதான் நாம் விரும்பும் பூவாக மல்லிகைப்பூ விளங்குகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரூபாய் 500க்கும் விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று ரூபாய் 1200க்கு விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் மல மலவென உயர்ந்துள்ளது.ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், மழை காரணமாக பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூ ஈரோட்டுக்கு ஒரு டன் முதல் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று வெறும் 300 கிலோ மட்டுமே வந்து இருக்கின்றது.

மழையின் காரணமாகவும் ,ஓணம் பண்டிகை, முகூர்த்த நாட்கள் என தொடர்ந்து விசேஷ நாட்கள் வருவதாலும் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இனிவரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது என அவர் கூறியிருந்தார். ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோவில் வருமாறு முல்லை ரூபாய் 480, ஜாதி பூ ரூபாய் 360, கனகாம்பரம் ரூபாய் 600, அரளி ரூபாய் 300, ரோஜா பூ ரூபாய் 200, சம்மங்கி ரூபாய் 140, செவ்வந்திப் பூ ரூபாய் 240 மற்றும் பட்டு பூ ரூபாய் 270 மேற்கூறிய விலையில் தான் ஈரோட்டில்  பூக்களின் விலை விற்பனையாகி வருகின்றது.