புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!

0
294
#image_title

புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!

 

அமர்நாத் யாத்திரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒன்றான சிவபெருமான், இந்தியர்களால் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களாலும் வணங்கப்படுகிறார்.

ஒவ்வொரு கோடை மாதங்களிலும் தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலை பகுதியில் அமர்நாத் என்ற குகை அருகே இயற்கையான முறையில் பனியில் உருவாகும் லிங்கத்தை காண நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.

2023- ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 தொடங்கி ஆகஸ்ட் 31 வரையில் 62 நாட்களுக்கு நடைபெறும். சமீபத்தில் இந்த யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 40- க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களை அமர்நாத் ஆலய வாரியம் தடை செய்துள்ளது.

ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இமயமலையில் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் 4 முதல் 5 கி.மீ வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் குறித்து பிரணாயாமம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புனித யாத்திரைக்கு வரும் பக்தர்கள் 14 கி.மீ நடைப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரைடு ரைஸ், புலாவ், பூரி, பர்கர், பரோட்டா, பீட்சா, தோசை, ரொட்டி, ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பாளி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், பானங்கள் போன்ற உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரிசி சார்ந்த உணவுகள், தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை பக்தர்கள் உண்ண வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்களை கொண்டு சென்றால் அபராதங்கள் விதிக்கப்படும் என்று கோயில் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.