Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய உணவுக் கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே விண்ணப்பிய்யுங்கள்!

உதவியாளர் இளநிலை பொறியாளர் சுருக்க எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக இருக்கின்ற 5,043 ஆளு இடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்கள்: 5,043

முக்கியமான நாட்கள்: விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் 6-9-2022 காலை 10 மணி முதல் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 5-9-2022 மாலை 4 மணி வரையில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் வெளியிடப்படும்.

பொது நிபந்தனைகள்: நாடு முழுவதும் இருக்கின்ற இந்திய உணவுக் கழகத்தின் 6 மண்டலங்களில் இந்த ஆள் சேர்ப்பு நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திலும் இளநிலை பொறியாளர், சிவில், இளநிலை, பொறியாளர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங், சுருக்கெழுத்து உதவியாளர், பொது உதவியாளர், கணக்கு உதவியாளர், டெக்னிக்கல் உதவியாளர், உணவு தானிய கிடங்குகள் உதவியாளர், பதவிகள் நிரப்பப்பட உள்ளனர்.

புதுடெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் 2,388 காலியிடங்களும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 989 காலியிடங்களும், பிஹார், ஜார்கண்ட், போன்ற மாநிலங்களில் உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில் 768 காலியிடங்களும், குஜராத், மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களில் உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 713 காலியிடங்களும், மணிப்பூர், அசாம், உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு மண்டலத்தில் 185 காலியிடங்களும், நிரப்பப்படவுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு மண்டலத்தில் இருக்கின்ற ஏதாவது ஒரு பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரரின் வயது ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அன்று 28க்கு கீழ் இருக்க வேண்டும். சுருக்கு எழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது ஜூலை மாதம் 1ம் தேதி அன்று 25க்கு கீழ் இருக்க வேண்டும்.

உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரம்பு ஜூலை மாதம் 1ம் தேதி அன்று 27க்கு கீழ் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு வழங்கப்படும்.

ஆகவே நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் பிரிவினர், பட்டியல் பழங்குடியின வகுப்பினர், 5 ஆண்டு வரையில் வயதுவரம்பு சலுகை பெற தகுதி உடையவர்கள். இதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 வருடங்கள் வரையில் வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகள் வரையில் சலுகை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

கல்வி- உதவியாளர், பொது உணவு தானிய கிடங்குகள் பதவிக்கும், சுருக்கு எழுத்தாளர் பதவிக்கும், உயர்கல்வியில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500 ஆகும். பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்வதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:2 கட்டங்களாக நடைபெறும் எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களினடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

Exit mobile version