உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!

0
94

அல்ஸ்ர் வாய்புண் உள்ளவர்களுக்கு மணத்தக்காளி கீரை அருமருந்தாக பயன்படுகிறது.கீரையை சாப்பிட்ட அழுத்து போனவர்களுக்கும் இரவில் சட்னி செய்பவர்களுக்கும், சற்று மாறுதலாக இந்த மணத்தக்காளி சட்னியை செய்து கொடுத்துப் பாருங்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை: ஒரு கைப்பிடி அளவு அல்லது ஒரு கப்
தக்காளி:3
சின்ன வெங்காயம்: 5 to10
பூண்டு: 3 பல்
சீரகம்&மிளகு: ¼ டீஸ்பூன்
இஞ்சி:சிறிதளவு
வரமிளகாய்: தேவைக்கேற்ப
புளி: சிறிதளவு
கருவேப்பிலை: ஒரு கொத்து
தேங்காய்:1 மூடி

செய்முறை:
அலசிய மணத்தக்காளிக்கீரையுடன் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.மணத்தக்காளிக் கீரை நல்லா சுருண்டு பச்சை வாசம் போகும் வரை வணக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு வரமிளகாயை எண்ணைய் ஊற்றாமல் சிறிதளவு சூட்டில் வறுத்து எடுத்து
வைத்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மூடி தேங்காய் துருவல்,ஜீரகம்,உப்பு,நறுக்கிய இஞ்சி,பூண்டு,புளி,வருத்த வைத்த காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, இவை அனைத்தும் வணக்கிகிய மணத்தக்காளி உடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

புளியும்,உப்பும்,காரமும் உங்கள் தேவைக்கு ஏற்ப போட்டுக் கொள்ளலாம்.கடலை சேர்த்தால் சட்னியின் ருசி குறைந்து விடும்.ஒரு முறை இதுபோன்று செய்து பாருங்கள் திரும்பத்திரும்ப சாப்பிடத் தோன்றும்.