Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நியாயவிலை கடைகளுக்கு புதிய உத்தரவை அதிரடியாக போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோக திட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது  என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டிருக்கின்றனர் இதுபோன்று நியாயவிலை கடைகளுக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை கடைகளில் பொருட்களை வாங்கும் விதத்தில் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

ஆனாலும் இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் இருக்கிறது. இனியும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலமாக பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான படிவத்தை நியாயவிலை கடைகளில் பூர்த்திசெய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டுக்கு என்று லாப நோக்கத்துடன் இருப்பில் வைத்து விற்பனை செய்யப்படும் பொது விநியோகத் திட்டத்தை சாராத கட்டுபாடற்ற பொருட்கள் எக்காரணத்தை கொண்டும் கட்டாய விநியோகம் செய்ய இயலாது. அந்த பொருட்களை அவர்கள் தாமாக முன்வந்து பெற சம்மதிக்கவில்லை என்றால் அதனை வினியோகம் செய்யும்போது அவற்றிற்கென தனியாக கடை நடத்தும் நிறுவனத்தின் முறையான அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இதுபோன்ற கட்டுபாடற்ற பொருட்களை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அடங்காது என்ற நிலையில் அவற்றை மின்பொருள் படி பொது விநியோகத்தில் குறுஞ்செய்தியில் இணைக்க வழிவகை இல்லை. மேலே சொல்லப்பட்டு இருக்கின்ற அறிவுரைகள் தவறாது பின்பற்றப்படுவது நியாய விலை கடைகளில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version