நரம்பை மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய உணவுகள்!

0
252

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தக் கூடிய உணவுகள்!நரம்பை வலுப்படுத்தக்கூடிய உணவுகள் என்னென்ன? அதற்கு தேவையான சத்துக்கள் எவை? அவை எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளன என பார்ப்போம்.

1. நமது நரம்பு மண்டலத்திற்கு முக்கியமாக ஒரு அமிலம் தேவை அது ஆல்பா லிப்போயிக் அமிலம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கை கால் குத்தல், மதமதப்பு, எரிச்சல், இவையெல்லாம் குணமாக அவர்களுக்கு கொடுக்கக்கூடிய மாத்திரையில் இந்த ஆல்ஃபா லிபோயிக் அமிலம் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய இந்த அமிலம் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் தக்காளி, விலங்குகளின் கல்லீரல், கீரை வகைகளிலும் இந்த அமிலம் உள்ளது.

2. வைட்டமின் பி6; ‌‌      நமது நரம்பு மண்டலங்களில் இரண்டு வகையான சத்துக்கள் உள்ளன 1. டோப்பமைன் 2. செரட்டோனின் இந்த சத்துக்களை சரியாக வைத்துக் கொண்டால்தான் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். பக்கவாத நோயாளிகள், நடுக்கவாத நோயாளிகள்,  முகவாத நோயாளிகள்,  இவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிப்பாக இருக்கும். குறிப்பாக இவர்களுக்கு வைட்டமின் பி6 குறைவாக இருக்கும்.  ப்ரோக்கோலி, கீரை வகைகள், முட்டை, பால், மீன் ஆகியவற்றில் பி6  அதிகமாக உள்ளது. இதை இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது டோபமைன், செரடோனின் சரியாக சுரந்து நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

3. விட்டமின் பி 12 ;  நமது மூளையில் இருக்கக்கூடிய தூண்டுதல்களை ரெகுலேட் பண்ணக்கூடிய செரடோனின் எனப்படும் மூலப் பொருளை அதிகப்படுத்தி நரம்பு தூண்டல்களை சரி பண்ணக்கூடிய தன்மை இதற்கு உண்டு. குழந்தை பாக்கியத்திற்கும் இந்த விட்டமின் பி 12 தேவைப்படும். இது தயிர் கொழுப்பு குறைவான பால், முட்டை ஆகியவற்றில் அதிகம் உள்ளது.

4. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இவையும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்திக் கூடியது. நமது மூளை நரம்புகளை வலுப்படுத்தி புத்துணர்ச்சியாக்கி நமது ஞாபக சக்தியை மேம்படுத்தும். பிளாக் சீட்ஸ் அரிசி விதை மற்றும் ஆளி விதைகளில் இந்த சத்துக்கள் நமக்கு அதிகம் கிடைக்கும்.