Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரக நோய்களை குணமாக்கும் உணவுகள்!! கிட்னி ஹெல்த்தை காக்க கட்டாயம் சாப்பிடுங்கள்!!

உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது முக்கியம்.நாம் சிறுநீரக ஆரோக்கியத்தை கவனிக்க தவறினால் சிறுநீரக கல்,சிறுநீரக பாதை தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம்.

1)பெர்ரி

வைட்டமின் சி சத்து நிறைந்த பெர்ரி பழத்தை உட்கொண்டால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்குவதை தடுக்கிறது.

2)பூண்டு

வைட்டமின் சி,மெக்னீசியம்,சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த பூண்டு பற்களை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

3)குடை மிளகாய்

சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்க குடை மிளகாய் உணவுகளை உட்கொள்ளலாம்.

4)எலுமிச்சை

சிறுநீரக கற்களை கரைக்க எலுமிச்சை சாறு செய்து பருகலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

5)முட்டைகோஸ்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படும் முட்டைகோஸை உட்கொண்டால் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.

6)ஆப்பிள்

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக தினம் ஒரு ஆப்பிள் உட்கொள்ளலாம்.

7)காலிஃபிளவர்

இதில் வைட்டமின் சி,போலேட்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இந்த காலிஃபிளவரை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

8)செர்ரி

சிறுநீரகப் பாதையில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற செர்ரி பழத்தை சாப்பிடலாம்.இந்த உணவுகளோடு தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.இவற்றை சரியாக செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்படும்.

Exit mobile version