Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யபட வேண்டும்.. பிரியாவின் தந்தை கோரிக்கை..!

மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னயை சேர்ந்தவர் பிரியா (17).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவர் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைபிடிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவரது வலி குறையவில்லை என கூறப்படுகிறது.

இதனால், மேல்சிகிச்சைக்காக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கால்தசைகள் அழுகியுள்ளதால் அவர் கால்களை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர். அதன்பின், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்களின் கவன குறைவே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. அவர்களை பணியிடை நீக்கம் செய்ததாகவும் இது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவரின் இழப்பிற்கு பல தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரின் தந்தை அளித்த பேட்டியில், பிரியாவுக்கு கால் ஜவ்வுதான் கிழிந்துள்ளது, அதனால் இந்த சிகிச்சையே போதும் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டாம் என கூறினார்கள். ஆனால், அவர் இறப்பார் என நாங்கள் நினைக்கவில்லை என மகளின் உயிரிழப்பு காரணமானவர்கள் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.

Exit mobile version