FOOT CORN: இந்த நேச்சுரல் டிப்ஸை பின்பற்றினால் கால் ஆணி மீண்டும் வரவே வராது!!
கால் பாதங்களில் உருவாகும் ஒரு கடினமான தோலை தான் கால் ஆணி என்கின்றோம்.இவை அனைவருக்கும் வரக் கூடிய சாதாரண பாதிப்பு தான்.ஆனால் இவை வந்துவிட்டால் அதிகப்படியான வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.
காலில் ஏதேனும் கற்கள்,தடிமனான பொருட்கள் அழுத்தி விட்டால் அந்த பகுதியில் இரத்தம் உறைந்து ஆணியாக மாறி விடும்.
இந்த கால் ஆணியை குணமாக்க இனி திரும்ப வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வைத்தியங்கள் தங்களுக்கு உதவும்.
*அம்மான் பச்சரிசி
இந்த இலையில் இருந்து வெளியேறும் பாலை கால் ஆணி மீது படும்படி வைக்கவும்.தொடர்ந்து 3 நாட்களுக்கு வைத்து வந்தால் கால் ஆணி குணமாகும்.
*விளக்கெண்ணெய்
*கொடிவேலி எண்ணெய்
*மஞ்சள் தூள்
ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் கொடிவேலி எண்ணையை மிக்ஸ் செய்யவும்.பின்னர் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் சூடாக்கவும்.
இந்த எண்ணெய் சற்று சூடு ஆறியதும் கால் ஆணி மீது அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்தால் சில’தினங்களில் கால் ஆணி குணமாகிவிடும்.
*வசம்பு
*மஞ்சள்
ஒரு துண்டு வசம்பை உரலில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் சேர்த்து கால் ஆணி மீது தடவவும்.இவ்வாறு 2 அல்லது 3 தினங்கள் செய்து வந்தாலே கால் ஆணி குணமாகி விடும்.
*பூண்டு
*மஞ்சள் தூள்
ஒரு பல் பூண்டை தோல் நீக்கி நசுக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கால் ஆணி மீது பூசினால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.
*மருதாணி பொடி
*தேங்காய் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி மருதாணி பொடியில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை கால் ஆணி மீது தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.