நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டு இணையதளம் மூலமாக மறுபடியும் வகுப்புகள் ஆரம்பித்து நடைபெற்றுவருகின்றன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை 1 முதல் 9ம் வகுப்பு வரையில் இணையதளம் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து 10 மற்றும் 11 அதோடு 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு தற்சமயம் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பு மாணவர்கள் மிக விரைவில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருப்பதால் இவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதியிலிருந்து முதல் திருப்புதல் தேர்வு ஆரம்பித்து நடைபெற உள்ளது, இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றது. சூழ்நிலையில், அதே தேதியில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் திட்டமிட்ட அடிப்படையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. திருப்புதல் தேர்வுகள் எல்லாம் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தி முடிக்கப்படும் என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.