10 மற்றும் பிளஸ் 1 & 2 மாணவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம் !! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1& 2 மாணவர்களுக்கு பள்ளிகல்வித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் இந்த ஆண்டு 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் பல்வேறு சிரமங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. முதலில் 6முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு அடுத்ததாக மழலையர் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்பதால் அந்த வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முயற்சி செய்து வருகிறது.
இதன் காரணமாக 10, 11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இனிமேல் மாலை நேர வகுப்புகளை கட்டாயம் நடத்தப் பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து அதன்படி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மேலும் இந்த மாலை நேர சிறப்பு வகுப்புகள் மாலை 5 மணி வரையிலோ, அல்லது 5;30 மணி வரையிலோ நடைபெற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இது மாணவர்களின் கல்வி பெறும் தாக்கத்தை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.