1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு!

0
147

1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை ஜூலை 1 திறக்கப்பட உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகளை திறக்கலாம் என என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அந்த மாநில அரசு நாளை முதல் பள்ளிகளை திறக்க அனுமதித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க என்று அனுமதித்துள்ளது.

ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வரப்போவதில்லை. மாணவர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே பாடம் நடந்து வருகிறது. அதாவது புதிய மாணவர் சேர்க்கைக்கான பணிகளை செய்ய ஆசிரியர்கள் ஊழியர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று சொல்லியுள்ளது.

ஆனால் அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்கள் 9 ஆம் வகுப்பில் சேர்வதற்காக, 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாற்றுச் சான்றிதழ் அதாவது டீசி வழங்கும் பணி, பாடப்புத்தகங்கள் விநியோகம், மதிய உணவு மற்றும் பள்ளி ஆடைகளுக்கான பணத்தை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் ஆகிய பணிகளைச் செய்வதற்காக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

!