ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக குழந்தைகள் நோயின்றி வாழ அவர்களின் உணவுப்பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும்.குழந்தைகள் காலையில் உண்ணும் உணவு புரோட்டீன்,நார்ச்சத்து,நல்ல கொழுப்பு,கால்சியம் சத்து நிறைந்தவையாக இருக்க வேண்டும்.அந்தவகையில் இவை அனைத்தும் ஒரு சேர கிடைக்கும் ஸ்மூத்தி தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.
தேவைப்படும் பொருட்கள்:-
*மாதுளை
*வாழைப்பழம்
*கருப்பு திராட்சை
*பாதாம் பருப்பு
*பசும் பால்
*முந்திரி பருப்பு
*நாட்டு சர்க்கரை
தயாரிக்கும் முறை:-
1)முதலில் ஒரு மாதுளம் பழத்தை தோல் நீக்கிவிட்டு அதன் பழ விதைகளை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
2)அடுத்து கனிந்த வாழைப்பழம் ஒன்றை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதேபோல் 10 கருப்பு திராட்சை பழத்தை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3)இதற்கு முன்னர் 10 பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
4)அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து பசும் பால் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு வடித்துக் கொள்ள வேண்டும்.
5)இப்பொழுது மிக்சர் ஜாரை எடுத்து மாதுளம் பழம்,நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம்,கருப்பு திராட்சை,ஊறவைத்த பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,காய்ச்சிய பசும் பால் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து ஸ்மூத்தி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
6)பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி குழந்தைகளுக்கு பருக கொடுக்கலாம்.இந்த ஸ்மூத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு இந்த பானம் தேவைப்படக் கூடிய ஒன்றாகும்.
டீ,காபி,ஹார்லிக்ஸ் போன்ற பானங்களை தவிர்த்துவிட்டு இந்த ஸ்மூத்தி செய்து கொடுத்து குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.குழந்தைகள் விருப்பப்பட்டால் ஸ்மூத்யில் ஐஸ்கட்டி சேர்க்கலாம்.ஆனால் இனிப்பு சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை மட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.