பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கடந்த கொரோனா பரவலின் காரணமாக பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வானது 1௦, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வும், 14ஆம் தேதி பதினொன்றாம் வகுப்புக்கான பொது தேர்வும் தொடங்கியது. மேலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு பதிவு செய்தவர்களில் தனித் தேர்வர்கள் உட்பட 50 ஆயிரத்து 674 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நேற்று முன்தினம் தொடங்கிய பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் சுமார் 7, 88,64 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
ஆனால் 75 ஆயிரத்து 4௦4 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள், மீதம் 2660 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில் நடப்பாண்டு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களும், தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களும் ஜூன் மாதம் நடைபெறும் உடனடி தேர்வில் பங்கேற்கலாம், மாணவர்கள் அனைவருக்கும் இந்த தேர்வை எழுத சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.