சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!

0
160

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு! கேரள சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!

அதிக அளவில் பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவ சற்று குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மீண்டும் அனுமதித்தனர்.

 

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடைதிறக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றன. ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதினால் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதற்காக கேரளா உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வகையான கேள்விகள் எழுந்தது. மேலும் பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்கும் தனித்தனி வரிசை அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்கேற்ப அனைத்து மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் மற்றும் 24 மணி நேரமும் அனைத்து மொழிகளிலும் மக்களுக்கு புரியும் வகையில் அறிவிப்புகளை ஒலிபெருக்கம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் ஓய்வெடுக்க இடம் உணவு போன்றவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 200 கடந்து வரும் நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

 

அதற்கு கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜட் திருவனந்தபுரத்தில் நிபுணர்களிடம் கூறுகையில் புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.

தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரளவில் கொரோனா பாதிப்பு குறைவாக தான் உள்ளது. அதனால் சபரிமலையில் சாமி தரிசனம் குறித்து தற்போது பக்தர்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். மேலும் பக்தர்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை. கடந்த ஆண்டுகளைப் போல முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.