பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது. கடந்த டிசம்பர் மாதம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கபட்டது.மேலும் கடந்த ஜனவரி 15 தேதி பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1,பிளஸ் 2,பத்தாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு செய்முறைத் பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தேர்வுத் துறை நடைமுறை மேற்கொண்டு வருகின்றது.பொதுத் தேர்வெழுத உள்ள மாற்றுத் திறனாளிகள் தமிழ்வழி மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தந்த பள்ளியின் தலைமையசிரியர் மாணவர்களிடம் இருந்து உரிய தேர்வுக் கட்டணத்தை பெற்று அந்த தொகையை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் செலுத்த அறிவித்துள்ளது. தற்போது பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று பொதுத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி நான்கு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கட்டணத்தை விரைவாக செலுத்த வேண்டும்.இதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.