Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் கவனத்திற்கு! அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்!!

#image_title

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் கவனத்திற்கு! அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்கள் அரசு பேருந்துகளில் இன்று முதல் தங்களுக்கான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் ஜனவரி 14ம் தேதி போகிப் பண்டிகையும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் போகிப் பண்டிகையான ஜனவரி 14ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அரசு விரைவு பேருந்தில் செல்பவர்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு டிசம்பர் மாதம் 13ம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்து கழகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி பயணச் சீட்டுகளுக்கான முன்பதிவு இன்று அதாவது டிசம்பர் 13ம் தேதி தொடங்கியுள்ளது.

இதையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in மூலமாகவோ அல்லது TNSTC செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நேற்று அதாவது டிசம்பர் 12ம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version