Pakistan: பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு இந்து பெண் காவல்துறையில் உயர் பதவி பெற்று இருக்கிறார்.
இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடு ஆகும். ஆனால் பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு ஆகும். இந்தியாவில் இந்து மதம் அல்லாதவர்கள் அரசின் உயர் பதவிகளுக்கும், இராணுவத்தில் உயர் அதிகாரி, அரசியல் என அனைத்திற்கும் எவ்வித பாகுபாடு இன்றி இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை.
பாகிஸ்தானில் 2017 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் படி அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 96.5% இஸ்லாம் மதத்தினரும், சிறுபான்மையினராக (அத 2.1% இந்துக்கள் மற்றும் 1.3% கிறிஸ்தவம் மதத்தினர் இருக்கிறார்கள். மாற்று மதத்தினர் பாகிஸ்தான் நாட்டின் அரசு அதிகார பதவிகளில் வேலை கிடைப்பது என்பது மிக அரிதான ஒன்று ஆகும்.
இந்த நிலையில் இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தானில் போலீஸ் உயர் பதவிக்கு தேர்வாகி இருக்கிறார். பாகிஸ்தான் என்ற நாடு உருவாகி 77 ஆண்டுகள் ஆகிறது. முஸ்லிம் அல்லாத மாற்று மதப் பெண் ஒருவர் அரசு துறையில் உயர் பதவி பெறுவது இதுவே முதல் முறையாகும். மனிஷா ரோபேட்டா இந்து மாத பெண் ஆவார்.இவர் சிந்து மாகாணத்தின் காவல்துறையின் முதல் பெண் போலீஸ் அதிகாரி ஆவார்.
இவர் தான் கடந்து வந்த சிரமங்களை பற்றி பேசியது காட்சிகள் வைரல் ஆகி வருகிறது. அதில் பாகிஸ்தானில், ஒரு இந்து பெண் போலீஸ் அதிகாரியாவது மிகவும் கடினம் என்றும், தான் கடந்த 2021 இல் சிந்து பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.
மேலும், என்னை பார்த்து என சமூக பெண்கள் நான் வந்த பாதையில் முன்னேறி வர தொடங்குவார்கள் என்று கூறி இருக்கிறார். மேலும், பாகிஸ்தான் அரசு வேலை வாய்ப்புகளில் சிறுபான்மை மதத்தினருக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.