அடுத்த கொஞ்ச நாளைக்கு பாரதியும் கண்ணம்மாவும் ஒரு வீட்ல தான் இருக்கப் போறாங்க!! லாக் டவுன் இவங்களுக்கு நல்லா வொர்க் அவுட் ஆகுது!!

0
173
For the next few days, Bharathi and Kannamma will be fighting for a home !! Lockdown is a good workout for them !!

அடுத்த கொஞ்ச நாளைக்கு பாரதியும் கண்ணம்மாவும் ஒரு வீட்ல தான் இருக்கப் போறாங்க!! லாக் டவுன் இவங்களுக்கு நல்லா வொர்க் அவுட் ஆகுது!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீறியல்களுக்கும் என ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் டாப் ரேட்டிங் இருக்கும் 5 சீரியல்களில் ஒன்னான பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது பரபரப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. நாளுக்குநாள் சீரியலின் டிஆர்பி மட்டுமல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பாரதியும் கண்ணம்மாவும் எப்பதான் சேருவாங்க என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்பொழுது டவுன் ஒரு நல்ல வேலையை செஞ்சிருக்கு. அது என்னவென்றால் தற்பொழுது கண்ணம்மா வீட்டிலிருக்கும் ஹேமாவை பார்க்க பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு வருகிறார். அந்த சமயத்தில் திரும்பி பாரதியின் வீட்டிற்கு செல்ல நேரத்தில் கண்ணம்மா வீட்டு பகுதியில் redzone அறிவித்து விடுகின்றனர். ஆனால் அங்கு இருப்பவர்களை வெளியே செல்லக்கூடாது என்று போலீசார்கள் தடுத்து விடுகின்றனர். இதனால் அங்கேயே மாட்டிக்கொண்ட பாரதி இன்னும் சில நாட்களுக்கு கண்ணம்மா வீட்டில் தான் இருக்கப் போகிறார் என்று நேற்று வெளியான ப்ரோமோவில் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அடுத்து ஒளிப்பரப்பாகும் ஒரு சில வாரங்களில் ரசிகர்கள் எதிர்பாராத பல நல்ல திருப்பங்களை காணமுடியும் என்றும் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த விறுவிறுப்பு அதிகரித்து பல வருடங்களுக்குப் பிறகு பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து ஒரே வீட்டில் இருப்பது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மேலும் பரபரப்புடன் கூடிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.