Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நெல்லையில் விளையாட்டு கம்பியை பிடுங்கி எறிந்ததால்?. ஆத்திரத்தில் இளைஞருக்கு கத்தி குத்து!.

For throwing the game rod in the paddy field? A young man stabbed in anger!.

நெல்லையில் விளையாட்டு கம்பியை பிடுங்கி எறிந்ததால்?. ஆத்திரத்தில் இளைஞருக்கு கத்தி குத்து!.

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான காலி இடம் ஒன்றுள்ளது.அந்த இடத்தில் மனுதாரர் திருவண்ணாமலை ஹோட்டல் ஜோதி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவர் அந்த பகுதியில் கூடைப்பந்து விளையாடுவதற்காக ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கம்பியை யாருக்கும் தெரியாமல் அந்த கம்பியை  அகற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் எதிரி செல்வகுமார் மனுதாரர் சுரேஷை பயங்கரமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிறகு அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டு வந்தது. சிறிது நேரத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் அடித்துக்கொண்டனர்.

இதில் கையில் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். பிறகு சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

மேலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில்  சண்டையில்  ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

Exit mobile version