Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புகழ் பெற்ற சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை! அதற்கான காரணம் இதோ! 

புகழ் பெற்ற சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை! அதற்கான காரணம் இதோ!

கொரோனா பரவல் காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூட பட்டிருந்த நிலையில்.இந்த கோடை விடுமுறைக்கு அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

மக்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர்.அதில் சிலர் செய்யும் செயல்கள் அனைவரையும் பாதிப்படைய செய்கின்றது. அனைவரின் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக அமைகின்றது எனவும் அனைவரும் வருந்துகிறார்கள்.

அவ்வாறு புகழ் பெற்ற சுற்றுலா தளமான வால்பாறையில்  கடந்த சில தினமாக சட்டவிரோதமான செயல்கள் நடந்து வருகின்றது. அதனை தடுப்பதற்கு புலிகள் காப்பகத்தின் தலைவர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறை சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகள் செல்வதற்கு தடை என்று கூறியுள்ளார்.இந்த செய்தியை கண்ட சுற்றுலா பயணிகள் வருதத்தில் உள்ளனர்.

Exit mobile version