Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

கொரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமான சேவை முடங்கி உள்ளதால், நான்கு மாத காலமாக கர்நாடகாவில் தங்கி, கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொண்டுள்ளார் ஒரு ஸ்பெயின் நாட்டு குடிமகள் ட்ரெசா சொரியானோ.

ஸ்பெயினின் நகரமான வலென்சியாவைச் சேர்ந்தவர் ட்ரெசா சொரியானோ (வயது 34). இவர் தொழில்துறை வடிவமைப்பாளராக உள்ளார். இவர் இந்தியா மற்றும் இலங்கையை சுற்றிப் பார்க்க கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த காரணத்தால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்த சொரியானோ, உடுப்பி மாவட்டத்தில் உள்ள தனது நண்பர் புஜாரி என்பவர் வீட்டில் தங்கியுள்ளார்.

மேலும், அந்த கிராமத்தில் இருக்கும் கலாச்சாரத்தையும், கன்னட மொழியையும், விவசாயத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். தற்போது அவர் கன்னட மொழியில் சில வார்த்தைகளையும் பேசி வருகிறார்.

இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் ஒரு கிராமப்புறத்தில் இருப்பது எனக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டமாகும். நகரங்களுடன் ஒப்பிடும்போது, கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பானவர்கள். இயற்கை சூழலை அனுபவிக்க இங்கு நிறைய சுதந்திரம் உள்ளது.

புதுமையான அனுபவங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறுகிறார். இதையடுத்து வேர்க்கடலை சாகுபடி, மாடுகளின் பால் கறத்தல், நெல் நடவு செய்தல், ஆற்றில் மீன்பிடித்தல், காட்டில் இருந்து இலைகளை சேகரித்தல், ரங்கோலி வடிவங்களை உருவாக்குதல் மற்றும் தேங்காய் பிரண்டுகளிலிருந்து விளக்குமாறு தயாரித்தல் போன்ற பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றும் கூறுகிறார்.

Exit mobile version