Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்!!

#image_title

டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்!!

வடமாநிலத்தவரை கைது செய்து 84 மது பாட்டில்கள் பறிமுதல்

டெல்லியில் இருந்து ரயில் மூலம் ராயபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல், வடமாநிலத்தவர் கைது செய்து இரயில்வே போலீசார் நடவடிக்கை

டெல்லியில் இருந்து ராயபுரம் வரை சரக்குகளை ஏற்றி வரக்கூடிய சரக்கு ரயில் நேற்று மாலை ராயபுரம் ரயில்வே நிலையத்திற்கு வந்து பின் அதில் இருக்கும் சரக்குகளை ரயில்வே சரக்கு குடோனில் இறக்குமதி செய்யப்பட்டது

அப்போது பணியில் இருந்த ரயில்வே உதவி ஆய்வாளர் சதீஷ் ஒரு பெட்டகத்தில் வந்ததை சந்தேகத்தோடு ஆய்வு செய்த போது மதுபாட்டில்கள் இருந்துள்ளது

பின்னர் அதனை பெற்று கொள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்சிங்(58)
என்பவர் வந்த போது அவரை கைது செய்து மதுவிலக்கு கலால் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 6விஸ்கீ பாட்டில்களும் 24 ஓட்கா பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பானது 2,28,000 என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version