Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில்,

உக்ரைன் போரை தொடர்ந்து நமது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகக் கவனமாக கண்காணித்து வருகிறோம். ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் சர்வதேச உறவுகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அதற்கு ஏற்ப எங்கள் உத்திகள் அமையும். இந்தியாவின் வெளியுறவுகொள்கை முடிவுகள், இந்திய நாட்டின் நலன்களுக்காக எடுக்கப்படுகின்றன.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. அதனடிப்படையில் வன்முறை மற்றும் விரோதபோக்கை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா கேட்டுகொள்கிறது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவும் வலியுறுத்துகிறோம். இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் மோதல் சூழ்நிலையில் மனிதாபிமான அணுகலை நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ரஷியாவை கையாள்வதில் சிக்கல்கள் உருவாகி வருவதால், பணம் செலுத்தும் அம்சம் உள்பட பல்வேறு அம்சங்களை அரசு ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் இது குறித்து ஆராய நிதி அமைச்சகத்தின் தலைமையில் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த ஒரு குழு உள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், ரஷியாவிடம் இருந்து நாம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே எண்ணெய் வாங்குகிறோம். ஆனால் நம்மை காட்டிலும் பல நாடுகள் 10 முதல் 20 மடங்கு இறக்குமதி செய்கின்றன இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version