Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்டுக்குள் வராத காட்டுத்தீ:அமெரிக்காவில் புதிய சிக்கல்

அமெரிக்கா கலிபொர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரேன காட்டுத்தீ உருவானது . காட்டுத்தீயால் பல்வேறு வாழ்விடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீவிர முயற்சியில் இடுப்பட்டு வருகின்றனர்.

ரிவர்சைட் கவுண்டி மாகாணத்தில் தொடந்த தீ மிக வேகமாக பரவி காட்டுத்தீயாக உருவேடுத்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள 8 ஆயிறத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியில் 700 ஏக்கர் பரப்பளவில் இருந்த காட்டுத்தீ , இரண்டே தினங்களில் மளமளவென பரவி 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு காட்டில் எரிந்து வருகிறது. தீயை கட்டுபடுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் தீயை தடுக்க தீயணைப்பு துறைரும்,மீட்பு குழுவினரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

தீயை அணைக்க தீயணைப்பு வாகங்கள் மூலம் இயலாததால் காட்டுக்குள் பற்றிய தீயை விமானங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் வகையில் பொடியை தெளித்து வருகின்றனர்.

இந்த காட்டுத்தீக்கு ஆப்பிள் ஃபயர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காட்டு தீயால் மனிதர்கள் யாரும் உயிர் இறக்கவில்லை என்றாலும், காட்டுத்தியில் பல உயிரினங்கள் அழிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version