ஒசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டதீவிரம் !!

0
115

ஓசூரில் அமைந்துள்ள தளி வனப்பகுதி முகாமிட்டுள்ள யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி,ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான யானைகள் வருடத்திற்கு ஒருமுறை இடம் பெயர்கின்றனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடமும் 50-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று அங்கிருந்து இடம்பெயர்ந்து தளி என்னும் வனப்பகுதியில் பலகரை காப்புகாட்டிற்கு வந்தன.

மாவட்ட வன அலுவலர் பிரபு அவர்களின் உத்தரவுபடி, தளி வானஅதிகாரி நாகராஜ் வனவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களுடன் யானை கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

அங்கிருந்த யானைகளை பட்டாசு வெடித்து மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதியில் விரட்ட திட்டமிட்டுள்ளனர் .இதனால் தளி வானப்பகுதியில் யானை முகாமிட்டுள்ளதையடுத்து அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . மேலும் மக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்றும் விவசாய தோட்டங்களில் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.