Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்

சார்ஜாவில் உள்ள கல்பா பகுதியில் சதுப்புநில காட்டு பகுதியில் அரிய வகை இனமான அரேபிய மீன்கொத்தி பறவைகள் காணப்படுகிறது. இதன் முட்டைகள் மிக சிறியதாக உள்ளதால் சிறிய வகை உயிரினங்கள் அவற்றை உணவாக எடுத்துக்கொண்டு சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் அந்த பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சவாலாகவே இருந்து வந்தது. எண்ணிக்கையில் மிக குறைவான அளவே உள்ள இந்த பறவைகளை இனவிருத்தி செய்து அதிகரிக்க இன்குபேட்டர் முறையில் குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்குபேட்டர் மூலம் குஞ்சு பொறிக்கப்பட்ட முதல் அரேபிய மீன்கொத்தி பறவை என்ற பெயரை இது பெறுகிறது. இந்த குஞ்சுடன் சேர்த்து தற்போது கல்பா சதுப்பு நில பகுதியில் 131 அரேபிய மீன்கொத்தி பறவைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோல் முட்டைகள் சேகரிக்கப்பட்டு இன்குபேட்டரில் பாதுகாப்பாக குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்படும் என சார்ஜா சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version